பின்னர் அலுவலக கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சோதனை நடத்தினர். அதில், 2 புரோக்கர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் ஆர்டிஓ நடராஜனின் காரில் சோதனை நடத்தி ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணமாகும்.
நேற்றிரவு 8.30 மணி வரை ஆர்டிஓ நடராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆர்டிஓவுக்கு ஆதரவாக புரோக்கர் சேதுராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலாவுக்கு ஆதரவாக புரோக்கர் ரமேஷ் ஆகியோர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சத்துடன் போலீசார் புறப்பட்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் ரூ.1.06 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.
