உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாராக நிசார் உருவாக்கம்..!!

உலகம் இதுவரை பார்த்திடாத தொழில்நுட்பங்களுடன் இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கி உள்ள நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. 11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயற்கை கோளை வின்ஞானிகள், காலநிலை வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இஸ்ரோ – நாசா செயற்கைத்துளை ரேடார் என்பதின் சுருக்கமே நிசார். இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கி இருக்கும் உலகின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோள் இது. ரூ.11294 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 2392 கிலோ எடை கொண்டது. புவி தாழ்வட்டப் பாதை செயற்கை கோளான நிசார்.பூமியிலிருந்து 747 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படும் 97 நிமிடங்களில் புவியை ஒருமுறை சுற்றி ஒரு நாளில் 14 முறை வளம் வந்துவிடும். புவியை அங்குலம் அங்குலமாக ஆய்ந்து இயற்கை வளங்கள் முதல் கடற்கரை கண்காணிப்பு வரை தரவுகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கும் துல்லிய வரைபடங்களாக அனுப்பும் பொதுவாக செயற்கைகோள்கள் ஒற்றை வரிசை ரேடார்களுடனே ஏவப்படும் ஆனால் உலகிலேயே முதல்முறையாக நாசாவின் எல் பாண்ட், இஸ்ரோவின் எஸ் பாண்ட் என இரட்டை அலைவரியை ரேடார்களாக நிசார் உருவாக்கப்பட்டுள்ளது.

மோசமான காலநிலையிலும் இரவிலும் கூட புவியின் மேற்பார்வை உயர்த்தெளிவு திறன் மற்றும் முப்பரிமாண காட்சிகளாக படமெடுக்க உதவும் சார்க் தொழில்நுட்பத்தை ரேடார்கள் பயன்படுத்துகின்றன. இதற்காக 12 மீட்டர் விட்டம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட ஆண்டெனா செயற்கைக்கோள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏவும்போது மடித்து வைக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றதும் இந்த ஆண்டெனா நிலைநிறுத்தப்படும். விண்வெளியில் நிறுத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஆண்டெனா இதுவாகும். தாவரங்கள், கட்டடங்கள், மண்ணடுக்குகளில் கூட ஊடுருவி சூழ்நிலை மண்டலம் குறித்த தகவல்களை L பேண்ட் வழங்க கடற்கரை பாதுகாப்பு மண்ணின் ஈரத்தன்மை உள்ளிட்டவை குறித்த துல்லிய தரவுகளை S பேண்ட் கொடுக்கும். நிலநடுக்கம் தாக்குவதற்கு முன்பே புவியில் ஏற்படும் மில்லிமீட்டர் அளவிலான அதிர்வுகளைக்கூட நிசார் செயற்கைகோள் துல்லியமாக கணித்துவிடும். காலநிலை மாற்றத்தால் உலகம் பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வரும்நிலையில் நிசார் அனுப்பும் தரவுகள் சூழ்நிலை மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பனிப்பாறை மாற்றங்கள், கடல்மட்ட உயர்வு நிலத்தடி நீர் ஆதாரங்களின் அளவும் மட்டுமின்றி சுனாமி, எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களையும் கணிக்க உதவும் இதற்கும் அப்பால் கடல் பனி, கப்பல்கள் கண்டறிதல், கடற்கரை கண்காணிப்பு, நீர் ஆதாரங்களை ஆவணப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை இந்த செயற்கைகோள் செய்கிறது.

 

The post உலகிலேயே முதன்முறையாக இரட்டை அலைவரிசை ரேடாராக நிசார் உருவாக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: