மதுராந்தகம், ஜூலை 16: செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை(பொறுப்பு) அருள் செல்வி தலைமை தாங்கினார். கவுன்சிலர் சுஜாதா பாரதி பாபு, கல்வி மேலாண்மை குழு தலைவர் கோகிலா, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை பாக்யா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், இப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் 97 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post காமராஜர் பிறந்தநாளையொட்டி பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை appeared first on Dinakaran.
