மெத்தம்பெட்டமைன் சப்ளை ஐடி ஊழியர் கைது

ஆலந்தூர், டிச.13: நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமின் என்ற போதைப்பொருள் விற்கபடுவதாக நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ நிர்மல்ராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ராமாபுரம் சத்யா நகரை சேர்ந்த டைட்டஸ் (எ) ஜானி (44) என்ற ஐடி ஊழியர் வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் மெத்தம்பெட்டமின் போதைப்பொருள் 2.50 கிராம் இருப்பது தெரிந்தது. விசாரணையில், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரபு என்பவரிடம் இதை வாங்கியதாக கூறினார். இதையடுத்து டைட்டஸ் மூலமாக பிரபுவை வரவழைத்து அவரிடம் விசாரித்தபோது கொரட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டைட்டஸ், பிரபு ஆகிய 2 பேரை கைது செய்து, 2.50 கிராம் மெத்தம்பெட்டமின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: