ஆற்றில் டைவ் அடித்து இளைஞர்கள் கும்மாளம் லால்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச விடுதி: கல்லூரி முதல்வர் அறிவிப்பு

 

லால்குடி, ஜூலை 8: லால்குடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச தங்கும் விடுதி உள்ளதாக கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
லால்குடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பத்து இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. BA தமிழ், BAஆங்கிலம், BA வரலாறு, BBA,BCom. Bsc கணினி அறிவியல், Bsc கணினி பயன்பாட்டியல், Bsc தொழில்நுட்பவியல், Bsc உயிர் தொழில்நுட்பவியல், Bsc இயற்பியல் ஆகிய பாட பிரிவுகள் உள்ளன. மேலும் அதற்குண்டான சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இக்கல்லூரியில் சேரும் மாணவ-மாணவிகள் அனைத்து பிரிவினர்களுக்கும் அரசின் இலவச தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு லால்குடி மற்றும் காணக்கிளியநல்லூரிலும், மாணவிகளுக்கு புறத்தாகுடியிலும் உண்டு உறைவிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மேற்கண்ட துறைகளில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

The post ஆற்றில் டைவ் அடித்து இளைஞர்கள் கும்மாளம் லால்குடி அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச விடுதி: கல்லூரி முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: