தொழிலாளிக்கு ஆயுள் தண்டணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 3 வயது சிறுமி உள்ளார். இவர்கள் வீட்டின் அருகிலேயே வசித்து வருபவர் கண்ணன்(28) தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும், கண்ணன் மீது போக்சோ வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞா லட்சுமி ஆஜராகினார். இதில் இருதரப்பு வாதங்களை கேட்டு விசாரணை முடிவில் கண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கண்ணனுக்கு ஆயுள்தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு அதிரடி தீர்ப்பளித்தார்.

 

The post தொழிலாளிக்கு ஆயுள் தண்டணை appeared first on Dinakaran.

Related Stories: