பட்னவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரிப்பு; தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: மராட்டிய சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் பட்னவிஸ் போட்டியிட்ட தொகுதியில் முறைகேடு என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மராட்டிய முதல்வரின் தொகுதியில் தினசரி 162 வாக்காளர்கள் அதிகரித்ததாக வெளியான செய்தியை சுட்டிக் காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மராட்டிய முதலமைச்சர் ஃபட்னாவிஸின் தொகுதியில் வெறும் 5 மாதங்களில் வாக்காளர் பட்டியல் 8% அதிகரித்துள்ளது.

சில பூத்களில் 20 – 50% வரை உயர்ந்துள்ளன. வாக்குப்பதிவில் தில்லுமுல்லு நடந்ததாக வாக்குச்சாவடி அதிகாரிகள் கூறுகின்றனர். முறையான முகவரி இல்லாமல் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் உள்ளதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையமோ? மௌனம் காக்கிறது. இதற்கெல்லாம் உடந்தையாக உள்ளது. இவை ஆங்காங்கே நடக்கும் சிறிய குளறுபடிகள் அல்ல. ஓட்டுத் திருட்டு. இதனை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே வாக்குமூலம்.

இதனால்தான், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலையும், பூத்களின் CCTV காட்சிகளையும் உடனடியாக வெளியிடச் சொல்கிறோம். வாக்காளர் சேர்ப்பு முறைகேட்டை மூடி மறைப்பதன் மூலம் அதை ஒப்புக் கொண்டுவிட்டனர். டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

The post பட்னவிஸ் தொகுதியில் 6 மாதத்தில் 29,219 வாக்காளர்கள் அதிகரிப்பு; தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்?.. ராகுல் காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: