திருச்சி: திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.