தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது: முதலமைச்சர் பேச்சு

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது என திருவண்ணாமலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் “நான்கரை ஆண்டுகளில் நாடே போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டாக வேண்டும் என்று பார்த்து பார்த்து ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். சுமார் 900 கோடி முறை பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது. ஆனால் இவர்கள் பேசுவதைப் பார்த்து, தமிழ்நாட்டின் தனித்தன்மை, திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி குறித்து தேடிப் படித்து நமக்கு ஆதரவாக யூடியூபர்கள் வீடியோ போடத் தொடங்கிவிட்டனர். திமுகவுக்கு வாக்களிக்காத மக்களிடம் கூட நல்ல பெயரை திராவிட மாடல் ஆட்சி எடுத்துள்ளது. ஆனால் இதற்கு அப்படியே தலை கீழாக, பாஜகவுக்கு வாக்களித்த மக்களே ஒன்றிய பாஜக அரசை கழுவி ஊற்றி வருகிறார்கள்” என உரையாற்றினார்.

Related Stories: