இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட மனநல ஆலோசனைகள் பெரிய அளவில் உதவியாக இருந்தது.2021 முதல் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இந்த ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வெழுதிய 1,35,715 பேரில் 76,781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தவறியோர் மனம் தளராமல் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் 104 என்ற எண்ணில் ஆலோசனை தரப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
The post நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.
