×

உதவி ஆட்சியர் பொறுப்பேற்பு

 

திண்டுக்கல், ஜூன் 13: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக நேற்று வினோதினி (பயிற்சி) பொறுப்பேற்று கொண்டார். புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். பரதநாட்டியம், கர்நாடக இசையில் நுண்கலைகளில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

சமூக மருத்துவ துறையில் ஜூனியர் ரெசிடென்ட் டாக்டராக பணியாற்றினார். இந்திய ரயில்வே மேலாண்மை சேவையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 2024ம் ஆண்டு இந்திய ஆட்சி பணி தேர்வில் தேர்ச்சி பெற்றார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.

The post உதவி ஆட்சியர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Vinodini ,Dindigul Collectorate ,Puducherry ,Indira Gandhi Government Medical College ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்