கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 13ம் தேதி கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சிபெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. கல்வித் தகுதி 8-ம் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி. ஆண்களுக்கு வயது உச்சவரம்பு 40.
பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

பயிற்சி காலத்தில் கட்டணமில்லா பயிற்சி, உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின் போது ஆன் ஜாப் டிரெய்னிங் மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி. விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 13.06.2025. தொடர்புக்கு: 044-22501350.

 

The post கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 13ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: