இதனால் கப்பல் நகர்ந்து செல்வதில் சிக்கில் ஏற்பட்டு கப்பலின் அடிபாகங்கள் சில சேதமடைந்துள்ளது. அதிபரின் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் அவர் மிகுந்த கோபமடைந்ததாக தெரிகிறது. முழுமையான கவனக்குறைவு, பொறுப்பின்மையால் ஏற்பட்ட கடுமையான விபத்து மற்றும் குற்றச்செயல் என்று கூறிய அதிபர் கிம் ஜாங் உன், அதிகாரிகள், தொழில்நுட்ப கலைஞர்கள், அறிவியலார்கள், கப்பலை வடிவமைத்தவர்கள், கப்பலை கட்டியவர்கள் என அனைவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த கப்பலானது ஏவுகணை சோதனை, அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புக்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post வடகொரியாவில் அறிமுகம் செய்த உடனேயே விபத்தில் சிக்கிய போர்க்கப்பல்: கொந்தளித்த அதிபர் கிம் ஜாங் உன் appeared first on Dinakaran.
