உத்தரப்பிரதேச தேர்தல்: நாளை மறுநாள் காணொலி வாயிலாக பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மறுநாள் காணொலியில் பிரதமர் மோடி தொடங்குகிறார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச தேரதல் களம் மிக பரபரப்பாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் பா.ஜ.க, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்து அச்சு மற்றும் சாட்டிலைட் ஊடகங்களிலும் தொகுதி வாரியாக அலசி ஆராயப்பட்டு, வெளியிடப்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வீடு வீடாக சென்றும், சமூக வலைதளங்களிலும் இந்த மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச தேர்தலுக்கான பிரச்சாரத்தை நாளை மறுநாள் காணொலியில் பிரதமர் மோடி தொடங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் காணொலியில் வாக்குகளை சேகரிக்க உள்ளார். பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்காக 21 தொகுதிகள் உள்ள 5 மாவட்டங்களில் பெரிய LED திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மோடியின் காணொலி பேச்சை அனைத்து சமூக வலைதளங்களில் ஒளிபரப்பவும் பா.ஜனதா முடிவு செய்துள்ளது….

The post உத்தரப்பிரதேச தேர்தல்: நாளை மறுநாள் காணொலி வாயிலாக பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: