பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது: 10ம் வகுப்பு தேர்வு எழுதியோரில், 8,17,261 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 பேர் மாணவியர். தேர்ச்சி வீதம் 95.88%. மாணவர்கள் 4,00,078 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 91.74%. மாணவர்களைவிட, மாணவியர் 4.14% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் 98.31% தேர்ச்சியை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.45% பெற்று இரண்டாம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் 96.76% பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.
அதேபோல அரசுப் பள்ளிகளில் சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்கள் 97.49 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 15652 பேர் வருகை தரவில்லை. கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் 8,94,264 மாணவ மாணவியர் தேர்வு எழுதி, 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 91.55%. கடந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வின் தேர்ச்சியை விட இந்த ஆண்டில் 2.25% கூடுதலாக தேர்ச்சியை தமிழகம் பெற்றுள்ளது. இந்த தேர்வில் இந்த ஆண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 4917. மேலும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 1867. 10ம் வகுப்பு தேர்வில் 12,290 மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர் பங்கேற்ற நிலையில், அவர்களில் 11,409 (92.83%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 237 தேர்வில் பங்கேற்று 230 (97.05%)பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்கள் தவிர தனித் தேர்வர்கள் மொத்தம் 23,769 பேர் தேர்வு எழுதியதில் 9,616(40.46%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி வீதம்
எண் பாடங்கள் தேர்ச்சி வீதம் மாணவர்கள் எண்ணிக்கை
1. தமிழ் 98.09% 8
2. ஆங்கிலம் 99.46% 346
3. கணக்கு 96.57% 1996
4. அறிவியல் 97.90% 10838
5. சமூக அறிவியல் 98.49% 10256
* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வின் கடந்த 4 ஆண்டுகளின் ஒப்பீடு
வகுப்பு 2021 2022 2023 2024
10ம் வகுப்பு 100% 90.07% 91.39% 91.55%
பிளஸ் 1 100% 90.07% 90.93% 91.17%
* பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி வீதம்
அரசுப் பள்ளிகள் 91.26%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.63%
தனியார் சுயநிதிப்பள்ளிகள் 97.99%
* பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி வீதம்
இருபாலர் பள்ளிகள் 94.06%
பெண்கள் பள்ளிகள் 95.36%
ஆண்கள் பள்ளிகள் 87.84%
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட7.52% கூடுதலாகவும், இருபாலர் படிக்கும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22% கூடுதலாகவும் தேர்ச்சியை எட்டியுள்ளன.
அதிக தேர்ச்சியை பெற்ற 5 மாவட்டங்கள்
1. சிவகங்கை 98.31%
2. விருதுநகர் 97.45%
3. தூத்துக்குடி 96.76%
4. கன்னியாகுமரி 96.66%
5. திருச்சி 96.61%
அரசுப் பள்ளி மாணவர்களில் அதிக தேர்ச்சி வீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்்கள்
1. சிவகங்கை 97.49%
2. விருதுநகர் 95.57%
3. கன்னியாகுமரி 95.47%
4. திருச்சி 95.42%
5. தூத்துக்குடி 95.40%
* துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை, மே 17: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை நேற்று வெளியிட்டது.
பத்தாம் வகுப்பு
தேதி பாடம்
ஜூலை 4 தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்கள்
ஜூலை 5 விருப்ப மொழி
ஜூலை 7 ஆங்கிலம்
ஜூலை 8 கணக்கு
ஜூலை 9 அறிவியல்
ஜூலை 10 சமூக அறிவியல்
பிளஸ் 1 வகுப்பு
தேதி பாடம்
ஜூலை 4 தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
ஜூலை 5 ஆங்கிலம்
ஜூலை 7 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் மற்றும் தொழில் பாடங்கள்
ஜூலை 8 இயற்பியல், பொருளியல்,
ஜூலை 9 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல்,உயிரி வேதியியல், சிறப்பு தமிழ் மனையியல், அரசியல் அறிவியல், நர்சிங்,
ஜூலை 10 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
ஜூலை 11 கணக்கு, விலங்கியல், வணிகவியல், தொழில் கல்வி
மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கான துணைத் தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடியும்.
The post 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; மாணவர்களை விட மாணவிகள் 4.14% கூடுதலாக தேர்ச்சி appeared first on Dinakaran.
