கோவில்பட்டி, மே 16: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர பொதுக்குழு கூட்டம், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ- மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவ, மாணவியர் இணைய வழியில் பங்கேற்று கலந்துரையாடினர். தங்களது பணிகளில் சிறந்து விளங்கிய சர்வதேச முன்னாள் மாணவர்களுக்கும் அலுமினி அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், மாணவ வழிகாட்டிகளுக்கும் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
The post நேஷனல் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.
