திருப்பூர், ஜன. 9: திருப்பூர் மாவட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனங்களின் தகுதி குறித்து நேற்று மாவட்ட எஸ்.பி கிரிஷ் அசோக் யாதவ் ஆய்வு செய்தார். போலீஸ் வாகனங்கள் ஆய்வு என்பது வாகனங்களின் இயந்திரத் தரம், பராமரிப்பு, சட்டபூர்வ ஆவணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் (தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டிகள்), தொடர்பு சாதனங்கள், மற்றும் ஒளிரும் விளக்குகளின் செயல்பாடு ஆகியவை சரியான நிலையில் உள்ளதா? என உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், பேட்ரோல்’ வாகனம் உட்பட வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு மாதந்தோறும் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், ‘ஹைவே ரோந்து வாகனங்களின் தகுதி குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஒவ்வொரு வாகனங்களின் தற்போதைய நிலை குறித்தும், வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினார். தொடர்ந்து, வாகனங்களின் தகுதி, உதிரிபாகங்களின் நிலைமை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டனர்.
