விருதுநகர், ஜன. 9: விருதுநகர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்பத் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசுகையில், ஊதிய உடன்பாடு ஒப்பந்தத்திற்கு
ஒப்புதல் பெற நிர்வாக குழு இயக்குனர் கூட்டத்தில் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதில் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக சண்முகராம், எஸ்என்இஏ மாவட்டச் செயலாளர் கூடலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
