பிரச்னைக்குரிய பதிவுகளை இணையத்தில் பதிவிட்ட முக்கூடல் வாலிபர் கைது

நெல்லை, மே 13: சமூக வலைதளமான இன்ஸ்ட்கிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை பதிவிட்ட முக்கூடல் வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியயாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜனின் மகன் சதீஷ் குமார் (22). இவர் சமூக வலைதளமான இன்ஸ்ட்கிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்னையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்களோடு கையில் அரிவாளுடன் கூடிய வீடியோவை பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பரப்பினார். இதுகுறித்து தெரியவந்த முக்கூடல் போலீசார், வழக்குப் பதிவு செய்து சதீஷ் குமாரை கைது செய்தனர்.

The post பிரச்னைக்குரிய பதிவுகளை இணையத்தில் பதிவிட்ட முக்கூடல் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: