அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி கொண்டாடப்பட்ட தமிழ் வார விழாவினை முன்னிட்டு, அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு நடைபெற்ற கையெழுத்து போட்டிகள், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் குறித்த வினாடி வினா போட்டிகள், கதை சொல்லும் போட்டிகள், தமிழ் இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தனிநபர் மற்றும் குழு என பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று வெற்றி பெற்ற மொத்தம் 59அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்ளை கலெக்டர் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களின் கீழ் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,10,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஆர்டிஓ விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரெங்கநாதன், கீர்த்தனாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: