இதனால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல்லின் எஞ்சிய லீக், பிளே ஆப் என 16 போட்டிகளும் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் எஞ்சிய போட்டிகள் தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி போட்டி மீண்டும் முதலில் இருந்து நடக்க உள்ளது. எஞ்சிய போட்டிகள் தொடர்பான புதிய அட்டவணை 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சண்டிகர், தர்மசாலா, ராஜஸ்தான், அகமதாபாத், டெல்லியை தவிர பிற மைதானங்களில் போட்டிகள் நடைபெறலாம் என தெரிகிறது.
இதுபற்றி ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறகையில், “போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்கி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் இப்போது ஆராய்ந்து வருகிறோம். உடனடியாக நடத்த முடிந்தால், போட்டி நடைபெறும் தேதிகள் மற்றும் அனைத்தையும் நாங்கள் முடிவு செய்ய வேண்டும். அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுப்போம். மிக முக்கியமாக, நாங்கள் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்’’ என்றார்.
டெஸ்ட் கேப்டனாக கில் நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுகிறார். தற்போது துணை கேப்டனாக உள்ள பும்ரா, அடிக்கடி காயத்தில் சிக்கிக்கொள்வதால் அவரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை. துணை கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்படுவார் என தெரிகிறது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன், ரோகித்சர்மாவுக்கு பதிலாக சேர்க்கப்படலாம். மோசமான பார்ம் காரணமாக ஷமிக்கு இடம் கிடைக்காது என தெரிகிறது.
The post வரும் 16ம் தேதி ஐபிஎல் மீண்டும் தொடக்கம்?: புதிய அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகிறது appeared first on Dinakaran.
