அதன்படி, நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் ரகுபதிக்கு இயற்கை வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ளது. அண்மையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறையும் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேபோல் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் : அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு!! appeared first on Dinakaran.
