இன்று காலை அமைச்சரவை குழு கூட்டம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போயிருக்கும் தருணத்தில், சிந்தூர் ஆபரேஷனின் தற்போதைய நிலை, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையின் போது சிந்தூர் தாக்குதல் நிறைவேற்றப்பட்ட போது இருந்த நிலைமை, ராணுவத்தின் அடுத்த செயல்பாடுகள், எல்லைகளில் தற்போதுள்ள சூழல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரும் பிரதமர் மோடி தலைமையில், இன்று காலை பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதனிடையே இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post இன்று காலை அமைச்சரவை குழு கூட்டம்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: