கொள்ளிடம் ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியதற்கு இறால் குட்டை கழிவுநீரே காரணம்

 

கொள்ளிடம்,மே 7: கொள்ளிடம் ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியதற்கு இறால் குட்டை கழிவு நீரை காரணம் என்று அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே சந்தபடுகை, திட்டுப்படுகை, கீரங்குடி, சரசுஸ்வதிவிளாகம், வடரங்கம் உள்ளிட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்று நீர் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்திற்கு மாறாக பசுமை நிறமாக மாறி உள்ளது. மேலும் ஆற்று நீர் பசுமை நிறமாக மாறி வருகிறது. கொள்ளிடம் ஆற்றுக்குள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் கடல் நீர் ஆற்றுக்குள் புகுந்து வருகிறது. தினந்தோறும் கடல் நீர் ஆற்றுக்குள் இருந்து வருகிறது.

ஆனால் இந்த கடந்த ஒரு மாத காலமாக பச்சை நிறமாக மாறி உள்ளது. இதுகுறித்து கடலோர கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் சென்று தண்ணீரை ஆய்வு செய்து பார்த்தபோது, கடலோர பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இறால் குட்டை அமைத்து இறால் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இறால் குட்டைகளில் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரசாயனம் கலவை இறால் வளர்வதற்கு உணவு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரசாயன பொருள் தினந்தோறும் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் கடல் நீர் உப்பு நீராக மாறி 20 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் வரை பசுமை நிறமாக காட்சியளிக்கிறது. இந்த நீர் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துவருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் இறால் குட்டைகளை கடலோர கிராமங்களில் உள்ள நிலங்களில் நடைபெற்று வருவதை நிறுத்தவும், இறால் குட்டைகளிலிருந்து கழிவு நீரை வெளியேற்றுவதை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடம் ஆற்று நீர் பச்சை நிறமாக மாறியதற்கு இறால் குட்டை கழிவுநீரே காரணம் appeared first on Dinakaran.

Related Stories: