நேற்று முன்தினம், ரவிச்சந்திரன் தன்னுடன் பணியாற்றி வரும் இருவரை, பொம்மிடி ஒட்டுப்பட்டியில் விட்டு விட்டு, டூவீலரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை கார்த்திகேயன் உள்பட 5 பேர் வழிமறித்து, தகராறு செய்ததோடு அவரை கை மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில், பொம்மிடி போலீசார் கார்த்திகேயன் (35), கிருஷ்ணராஜ் (48), கில் (25), சரண் (25) உள்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
The post தவெகவில் பதவி மோதல் வாலிபர் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.
