திமுக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி, மே 6: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி பால்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம்(51). இவர் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில் சில்வார்பட்டி ஊராட்சியில் வேலை செய்யும் வாட்டர்மேன் கடம்பவனம் குறித்து வெங்கடாச்சலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடம்பவனம் மற்றும் அவரது சகோதரர் முருகன் உள்பட சிலர் கடந்த 2ம் தேதி வெங்கடாச்சலத்தை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த வெங்கடாச்சலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கடாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் முருகன், கடம்பவனம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திமுக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: