விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட தேதி மாற்றம் கலெக்டர் அறிவிப்பு

 

நாகப்பட்டினம், மே 5: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை(6ம் தேதி) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய தினம் ஜமாபந்தியில் கலந்து கொள்வதை முன்னிட்டு விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட தேதி மாற்றம் கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: