ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஏப்.29: ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கம் தலைவர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பதிவு செய்து 6 மாதத்திற்கு ஒரு முறை முறையாக பராமரிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ரூ.9,774 உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 2018 முதல் ஊதிய உயர்வு அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும். பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் விடுமுறை அளிக்க வேண்டும். மாதம் தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். சீருடை, கையுறை, முகவுறை, காலுறை, பணித்தளவாடங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post ஊதிய உயர்வு கோரி தூய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: