தொண்டி, ஏப்.29: வக்பு எங்கள் உரிமை என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெருமுனை பிரசாரம் மங்களக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளையின் சார்பில், எங்கள் வக்பு எங்கள் உரிமை ஒரு மாத கால தீவிர பிரசாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விளக்கப் தெருமுனைக் கூட்டம் மங்களக்குடி நான்கு முனை சாலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரகுமான் அலி, மாவட்ட செயலாளர் அல்பார் அமீன், மாவட்ட பொருளாளர் முகமது ஆதில் ஆகியோர் தலைமை வகித்தனர்.
சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது காட்டு மிராண்டித்தனமான செயல், இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்திய உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் பல்வேறு நடைமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது வரவேற்கத்தக்கது. வக்பு வாரிய திருத்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெறும் வரை போராட்டம் ஓயாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை appeared first on Dinakaran.
