வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க விரைவில் அடையாள அட்டை அளிப்பதை அரசு பரிசீலிக்கும்: பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பண்ருட்டி வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசுகையில், ‘‘தமிழக காவல் துறைக்கு பெரிய தலைவலியாக இருப்பது, வெளிமாநில தொழிலாளர்களின் வருகை. இதுகுறித்த கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும்’’ என்றார். அமைச்சர் சி.வி.கணேசன்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் அதற்கான போர்ட்டலில் பதிவு செய்யப்படுகிறது.

இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெளிமாநில தொழிலாளர்களுடைய வருகை குறித்த விவரம், அதாவது, எவ்வளவு பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உரிமையாளர்கள், அதாவது நகைக் கடை உரிமையாளர்கள், வணிகக் கடை உரிமையாளர்கள் ஆகியோரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது கடைகளில் பணிபுரிகிறார்கள் என்பதை பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றி விரைவில் அரசு பரிசீலிக்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க விரைவில் அடையாள அட்டை அளிப்பதை அரசு பரிசீலிக்கும்: பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: