சென்னை: கத்தாரில் இருந்து 326 பேருடன் சென்னை வந்த பயணிகள் விமானத்தில் திடீரென பிரேக் சிஸ்டம் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரசமாக விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து, விமானி பத்திரமாக சென்னையில் தரையிறக்கினார். 10 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 2.30 மணிக்கே விமானம் தரையிறக்கப்பட்டது.