பேக்கரி, சுவீட் ஸ்டால்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும்

மன்னார்குடி, ஏப். 28: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது, பேக்கரி, சுவீட் ஸ்டால் மற்றும் உணவகங்களில் உள்ள உணவுப் பொருட்கள் சுத்தமாக மூடி வைக்கவும், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை தவறாமல் குறிப்பிடவும் வேண்டும்.

சாலையோர உணவகங்களில் உணவுப்பொருட்களை திறந்த வெளியில் வைக் காமல் முறையாக மூடி வைத்து விற் பனை செய்ய வேண்டும். பார்சல் செய் யும் பைகளை பிரிக்க வாயில் எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்க கூடாது. அட்சிடப்பட்ட காகிதங்களை உணவு பொருள்கலின் மீது படும்படி உபயோகப் படுத்தக் கூடாது.  முட்டையில் இருந்து தயாரிக்கப் படும் வெள்ளை நிறத்திலான மயோனைசில் உள்ள சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போ ன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் ஏப்ரல் 8-ந் முதல் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். இத்தகைய சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சம்பத்தப்பட்ட கடை சீல் வைக் கப்படும். மக்கள் நலன் கருதி உணவு பாதுகாப்பு பிரிவு எடுக்கும் நடவடிக் கைகளுக்கு வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுத்து நிறுத்தி மாநிலத்திலே முதல் மாவட்டமாக திகழ நாம் ஒவ்வொருவரும் உறுதியேற் பதோடு இலக்கை நோக்கி முன்னேற கடுமையாக உழைக்க வேண்டும். அத ற்கு உணவு பாதுகாப்பு பிரிவு முழுமை யாக துணை நிற்கும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி தெரி வித்துள்ளார்.

The post பேக்கரி, சுவீட் ஸ்டால்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: