ஆத்தூர் சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம்

ஆறுமுகநேரி, ஏப். 11: ஆத்தூர் சோமநாத சுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில் வீதியுலா, சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

7ம் திருவிழாவான 7ம் தேதி நடராஜர் காப்பு கட்டுதல், வெற்றிவேர் சப்பர பவனி, சிவப்பு சாத்தி அபிஷேகம் மற்றும் சிவப்புசாத்தி ருத்ர அம்சத்தில் நடராஜர் புறப்பாடு நடைபெற்றது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி அபிஷேகம், காலை 6.30 மணிக்கு நடராஜர் பிரம்ம அம்ச கோலத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 10 மணிக்கு பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் தாண்டவ தீபாரதனை நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10ம் திருவிழாவான நேற்று(10ம் தேதி) காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து 8.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடந்தது. இதில் பெண்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதி வழியாக உலா சென்று காலை 10.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. பின்னர் அன்னதானம் மற்றும் திருத்தேர் அலங்காரம் நடந்தது.

இரவு 7.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடந்தது. சுவாமிக்கு, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8.30 மணிக்கு சுவாமி -அம்பாள் பூம்பல்லாக்கு வீதியுலாவும், தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடந்தது. ஏற்பாடுகளை ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சிகளில் ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத்
தலைவரும், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சதீஷ்குமார், ஆத்தூர் குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்தலைவர் செல்வம், திமுக ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், ஆறுமுகநேரி பெர்ல்ஸ் பப்ளிக் பள்ளி சேர்மன் சுப்பையா, பொதுமேலாளர் மபத்லால், முக்காணி அருண் லாட்ஜ் அண்ட் காட்டேஜ் உரிமையாளர் மும்பை குமரேசன், ஆத்தூர் மணி ஓட்டல் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், மேனேஜர் வெங்கடேஷ், திமுக ஆழ்வை கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்கொடி,

ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் அரவிந்தன், துணை அமைப்பாளர் லிங்கராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் மாரிமுத்து, ஒன்றிய மாணவரணி ராஜேஷ், ஊர்க்காவலன், செல்லத்துரை நாடார் வாழைத்தார் இலை கமிஷன் மண்டி உரிமையாளர் சரவணன், ஆத்தூர் நகர திமுக இளைஞரணி சிவபெருமாள், விமல், ராகுல்பெருமாள், ஆத்தூர் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர்கள் முத்து, கவுஹர் ஜான், பிச்சமுத்து, பாலசிங் ஜெபக்குமார், கேசவன், கமலச்செல்வி, கோமதி, அசோக்குமார், வசந்தி, சங்கரேஸ்வரி, ராஜலட்சுமி, அருணா குமாரி, ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ஆண்டியப்பன் கண்ணன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் மூக்கன்சாமி, அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாமலை சுப்பிரமணியன், மேலாத்தூர் தொழிலதிபர் சந்திரசேகர், சிற்பி தர், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ரகுராமன், ஆத்தூர் லெட்சுமி விகாஸ் ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மகேஸ்வரி, ஆய்வர் செந்தில்நாயகி, நிர்வாகி ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post ஆத்தூர் சோமநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: