புதுக்கோட்டை, ஏப். 26: தமிழக ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் . செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜீவானந்தம், நகரச் செயலர் நாடிமுத்து, துணைச் செயலர் பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஆளுநரைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
The post இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
