அரியலூர் மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா கடைபிடிப்பு

அரியலூர்,ஏப்.25: அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா கடைபிடிக்கப்பட்டது.அரியலூரிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில், வாசகம் வட்டம் சார்பில் உலக புத்தகத் தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். நூலக வளர்ச்சிக்கு மருத்துவர் பிரவீன், மாணவர்கள் தமிழ்வேந்தன், பரிதிவளவன் ஆகியோர் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக இணைத்துக் கொண்டனர். வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்கரசி முன்னிலை வகித்து, மருதூர் கிளை நுலகத்துக்கு இலவசமாக மின்விசிறியை வழங்கினார். நீதித்துறை அலுவலர் வடிவேல், சிறுவளூர் பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை, அரியலூர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் நூலகர் செசிராபூ நன்றி கூறினார்.

The post அரியலூர் மைய நூலகத்தில் உலக புத்தக தினவிழா கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: