குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு கூட்டம்

காரிமங்கலம், ஏப்.25: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 30 ஊராட்சிகளில் நடந்து வரும் குடிநீர் விநியோகம் மற்றும் அடிப்படை தேவைகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், நீலமேகம் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மற்றும் மண்டல அலுவலர் வேடியப்பன் தலைமை வகித்து, 30 ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோடைக்காலத்தில் அனைத்து கிராமங்களிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் செயலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதேபோல் தெருவிளக்கு உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், பொறியாளர்கள் முருகன், இளவேனில், சரத்குமார், மேலாளர் கலைவாணி மற்றும் துணை பிடிஓ.,க்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: