புளியங்குடி,ஏப்.25: புளியங்குடியில் நகர மமக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மமக நகர தலைவர் சையது அலி பாதுஷா தலைமை வகித்தார். தமுமுக நகர செயலாளர் அசன், மமக நகர செயலாளர் முகைதீன், மமக நகர பொருளாளர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்ட செயலாளர் அப்துர்ரஹ்மான், மமக மாவட்ட பொருளாளர் பாசித், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி இஸ்மத் மீரான், சமூக நீதி மாணவர் அமைப்பின் மாவட்டச்செயலாளர் மஜீத் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மதுரையில் மே31ம் தேதி நடைபெற இருக்கும் தென் மண்டல மாநாட்டில் அதிகப்படியான மக்களை கலந்து கொள்ள செய்வது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை வன்மையாக கண்டிப்பது, புளியங்குடி நகரத்தின் சார்பாக சுமார் 50 வேன்களில் மதுரை மண்டல மாநாட்டுக்கு மக்களை அழைத்துச் செல்வது, தென்மண்டல மாநாட்டின் நோக்கம் குறித்து தெருமுனை விளக்க கூட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் 13-வது வார்டு கவுன்சிலர் அப்துல்காதர், பானுலேத் கமல், நகரதுணை செயலாளர் சமாதானி சாகுல், குறிஞ்சி சாகுல் மட்டன் செய்யது, ஜம்ஜம் ஜாபர் அப்துல் அஜீஸ், ஆட்டோ அலி, ஆட்டோ பாதுஷா, அனீஸ், மைதீன் அப்துல் சமது, அப்துல் நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post புளியங்குடியில் மமக செயல்வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
