இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 2 பேருக்கும் கலால்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில் சூத்திரவாக்கியம் என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷைன் டோம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதை தான் பார்த்ததாகவும், போதை மயக்கத்தில் தன்னிடமும், இன்னொரு நடிகையிடமும் அத்துமீறினார் என்றும் பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் கூறியது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நடிகர் ஷைன் டோம் சாக்கோ மீது மலையாள நடிகை அபர்ணா ஜோன்சும் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: சூத்திரவாக்கியம் என்ற மலையாளப் படத்தில் நானும் நடித்தேன். அப்போது நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதை நான் பார்த்தேன். அவர் வாயிலிருந்து வெள்ளை நிறத்தில் பொடியை துப்பினார். போதை மயக்கத்தில் நடிகை வின்சி அலோஷியசிடம் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் அவர் அத்துமீறினார். உடனடியாக நான் அந்தப் படத்தின் புகார் கமிட்டியிடம் கூறினேன். தற்போது நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தால் அதற்காக நான் இந்தியா வர வேண்டியது இருக்கும். எனவே புகார் கொடுக்க வில்லை என்றார்.
The post நடிகர் சாக்கோ என்னிடமும் போதையில் அத்துமீறினார்: மலையாள நடிகை அபர்ணா ஜோன்ஸ் புகார் appeared first on Dinakaran.