துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம்: கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு

வேதாரண்யம், ஏப். 24: வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினத்தில் ஒளவையாருக்கு ரூ.18.95 கோடியில் மணி மண்டபத்திற்கு காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் கடந்த நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். பின்பு கிராம மக்கள் சார்பாக பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு பணியினை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினம் கிராமத்தில் தமிழ் புலவர் ஒளவையாருக்கு தமிழ் நாட்டிலேயே இங்கு மட்டும் தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைத்துறை சார்பில் ஔவையார் கோயில் வளாகத்தில் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவானது நவம்பர் மாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.18.95 கோடி மதிப்பிட்டில் ஔவையார் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்ற வருகிறது. இப்பணியினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன், முன்னா சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை,

பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், அண்ணப்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தமிழ்செல்வி குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைராசு, தொண்டரணி துணை அமைப்பாளர் பாலு, மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் அருளரசு, திமுக அவைத்தலைவர் சீனிவாசன், காசி விஸ்வநாதர் ஆலய செயல் அலுவலர் தர்மராஜ், திருக்கோவில் உதவி செயற்பொறியாளர் குமார், கோவில் பணியாளர்கள் ரவி, கார்த்தி, கோபால், விஜய், ஆய்வாளர் சிவா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலைய துறையினர், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

The post துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணிமண்டபம்: கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: