கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அமமுக பிரமுகர் கர்சன் செல்வம் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார். கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலையில் தொடர்பிருப்பதாக வந்த புகாரையடுத்து சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆஜரான கர்சன் செல்வத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.