வேதாரண்யம், ஏப். 22: தலைஞாயிறு வட்டாரம் நீர்முளை ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இணைய சேவை மையத்தினை பள்ளிகளுக்கு துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர், நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், தொகுதி பார்வையாளர் ஜெயபிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர், மறைமலை தலைஞாயிறு ஒன்றிய திமுகசெயலாளர் மகா குமார், மாவட்ட கழக துணை செயலாளர் கற்பகம் நீலமேகம், ஒன்றிய அவைத் தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர்கள் ரவி அண்ணாதுரை, அமுதா, மாவட்ட பிரதிநிதிகள் ஆரோக்கியம்,
மச்சழகன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புவனேஸ்வரி செந்தில்குமார், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வீரக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி டேவிட், இளையராஜா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நந்தன் மற்றும் கிளைக் கழக செயலாளர், ஒன்றிய, பேரூர் கழக சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post நீர்முளை ஊராட்சியில் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட இணைய சேவை மையம் திறப்பு: அமைச்சர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
