புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புதுச்சேரி, ஏப். 22: புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியம் பள்ளூர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பந்தக்கல் பகுதியில் மக்குனி- கொப்பளம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மதுபான கடை அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் பந்தக்கல் பகுதியை சேர்ந்த பிரேமன் (58) மற்றும் கோழிகோடு பகுதியை சேர்ந்த காந்த (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: