200 சிக்சர் விளாசல் கே.எல்.ராகுல் அசத்தல்

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடிய கே.எல்.ராகுல், 14 பந்துகளில், ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை குவித்தார். இதன் மூலம், மிக விரைவாக, 129 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், 159 இன்னிங்ஸ்களில், 200 சிக்சர்கள் விளாசி, இந்த சாதனைப் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்தார்.

200 சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில், தோனி (165 இன்னிங்ஸ்), விராட் கோஹ்லி (180 இன்னிங்ஸ்), சுரேஷ் ரெய்னா (193 இன்னிங்ஸ்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஓட்டு மொத்த வீரர்களில், குறைந்த இன்னிங்ஸ்களில் 200 சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனைப் பட்டியலில், கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர், 69 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், ஏபி டிவில்லியர்ஸ், 97 இன்னிங்ஸ்களுடன் உள்ளார்.

The post 200 சிக்சர் விளாசல் கே.எல்.ராகுல் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: