வேலூர்: வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த வள்ளிமலையை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் சுனில்குமார்(24). இவர் கடந்த 2020ல் இந்திய கடற்படையில் சேர்ந்து தற்போது ஒடிசா மாநிலத்தில் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியில் பணியில் இருந்தபோது சாலை விபத்தில் சிக்கி பலியானார். அவரது சடலத்தை கடற்படை வீரர்கள் விமானத்தில் சென்னைக்கு நேற்று கொண்டு வந்தனர்.
பின்னர் சொந்த ஊரான வள்ளிமலைக்கு கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நேற்று மாலை பொன்னை நதிக்கரையில், இந்திய கடற்படையினர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன், சுனில்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது.
The post வேலூர் கடற்படை வீரர் ஓடிசாவில் விபத்தில் பலி appeared first on Dinakaran.