சிட்னி0: அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா மற்றும் அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் துறையில் ஏகபோக உரிமை செலுத்துவதாக நீதிமன்றங்களில் வழக்கு மேல் வழக்குகள் தொடரப்படுகின்றன. இது அமெரிக்காவில் போட்டி சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஆன்லைன் விளம்பர சந்தையில் ஏகபோக உரிமை செலுத்துவதாக அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது. இதே போல, கூகுளின் தாய் நிறுவனமான மெட்டா சமூக ஊடகத்தில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி ஏக போக உரிமை செலுத்துவதாக அமெரிக்க டிரேட் கமிஷன் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில், ரூ.2500 கோடி வழங்க மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் முன்வந்தும் டிரேட் கமிஷன் ஏற்கவில்லை. மேலும், ஆன்லைன் விற்பனை சந்தையில் அமேசானும், ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ஆண்ட்ராய்டுகளுக்கு எதிரான ஆப்பிள் நிறுவனமும் ஏகபோக உரிமை செலுத்துவதாக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்கின்றன. இதுபோன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது ஏகபோக உரிமைக்கு எதிரான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வழக்குகள் மூலம் போட்டிச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
The post அமெரிக்காவில் வழக்கு மேல் வழக்கு; ஏகபோக உரிமை செலுத்தும் தொழில்நுட்ப நிறுவனங்கள்: போட்டி சட்டத்தில் மாற்றம் appeared first on Dinakaran.