கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமங்களில் உள்ள நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் பணியையும், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் சேர்க்கின்ற பணியையும் கிராம உதவியாளர்கள் செய்து வருகின்றனர். அரசு ஊழியர்களாக இருந்து இவர்களது வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. இதற்குக் காரணம் இவர்களுக்கு அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததுதான். எனவே, இதனை தமிழக முதல்வர் கவனத்தில் எடுத்துக்கொண்டு வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் கிராம உதவியாளர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும்.

The post கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்க ஓபிஎஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: