நாட்டில் முதல் கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 10 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. வடக்கு ரயில்வேயில் முதல் ரயில் இயக்கப்படும். தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் – மங்களூரு தடத்தில் முதலில் இந்த ரயில் இயக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதர மண்டலங்களுடன் இணைத்து இயக்கப்படுகின்ற ரயில்கள் வரிசையில் திருவனந்தபுரம் – பெங்களூரு, கன்னியாகுமரி-ஸ்ரீநகர் (கொங்கன் வழி) தடத்தில் இயக்க வாய்ப்புகள் உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப்பில் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் தயார் செய்யப்படுகிறது. ரயிலில் பெட்டிகள் இணைப்பை பொறுத்து 1,128 பேர் வரை பயணிக்க இயலும். தற்போது வந்தே பாரத் ரயிலில் 8, 16, 20 சேர் கார் வசதி உள்ளது.
சென்னை ஐசிஎப்பில் உள்ள 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் செயர் கார் 10 பெட்டிகள் எடுத்து ஸ்லீப்பர் பெட்டிகள் மாற்றப்படுகிறது. 10 வந்தே ஸ்லீப்பர் தவிர மேலும் 50 ரயில்களுக்கான பெட்டிகள் தயார் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 2026-27ல் வெளியாகும். வந்தே ஸ்லீப்பர் ரயிலில் படுக்கை வசதிகள் நவீன முறையில் இடம்பெறும். பெட்டியில் இன்டீரியர் வசதி, படிப்பதற்கு வசதியாக சிறப்பு வெளிச்சம் உள்ள தனி வசதி, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய எல்இடி டிஸ்பிளே, சிறப்பு உதவி தேவைப்படுவோருக்கான படுக்கை வசதி, கழிவறைகள், ஆட்டோமேட்டிக் வாசல்கள், கவச் வசதியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இந்த பெட்டியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி-காஷ்மீருக்கு ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில்: தெற்கு ரயில்வே திட்டம் appeared first on Dinakaran.