2வது காலிறுதிப் போட்டியில் போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், லாத்வியாவை சேர்ந்த ஜெலனா அலோனா ஒஸ்டபெங்கோ மோதுகின்றனர். 3வது காலிறுதிப் போட்டியில், பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரைனா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலிஸே மெர்டென்ஸ் மோதுகின்றனர். கடைசி காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த, உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காப், இத்தாலியை சேர்ந்த, உலகின் 6ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியுடன் மோதுகின்றார்.
இன்று நடக்கும் காலிறுதிப் போட்டிகளில், உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் – 24ம் நிலை வீராங்கனை ஜெலனா அலோனா ஒஸ்டபெங்கோ இடையிலான போட்டி, டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் இதுவரை மோதிய 5 சர்வதேச போட்டிகளிலும் ஜெலனாதான் வென்றுள்ளார். இகா முதல் நிலை வீராங்கனையாக இருந்த சமயத்தில் கூட ஜெலனா வெற்றி வாகை சூடியிருக்கிறார். இவர்கள் இருவரும் மோதிய போட்டிகளில் பர்மிங்காம் ஓபன் (முதல் சுற்று, 2019), இந்தியன்வெல்ஸ் (4வது சுற்று, 2021), துபாய் ஒபன் (3வது சுற்று, 2022), யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (4வது சுற்று, 2023), தோஹா ஓபன்(அரையிறுதி, 2025) என 5 தொடர்களிலும் இகா தோல்வியை சந்தித்துள்ளார். இந்த 5ல் 3 தொடர்களில் நேர் செட்களில் ஜெலனா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மீண்டும் முதலிடத்துக்கு வரத் துடிக்கும் இகாவிடம் வெற்றிகள் விலகியே இருக்கின்றன. அதிலும் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடியும் ஒரு பட்டத்தை கூட அவரால் வெல்ல முடியவில்லை. அதே போல் 8 தொடர்களில் விளையாடி ஒன்றில் கூட பட்டம் வெல்லவில்லை.
The post ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் களமாடும் 4 முன்னணி வீராங்கனைகள் appeared first on Dinakaran.