சோனியா, ராகுல் மீது பொய் வழக்குகள்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஏப்.18: காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை கண்டித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசுக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2013ல் பணபரிமாற்றம் செய்ததற்காக அமலாக்கத்துறையின் மூலம் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகிய இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து, தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தின் முன்பு மாவட்ட தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பூதலூர் மோகன்ராஜ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாநில துணைத்தலைவர் பண்ணைவயல் ராஜாதம்பி, தஞ்சை பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜாமோகன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி, மாநில காங்கிரஸ் மருத்துவ அணி இணைச்செயலாளர் ஹர்சிகா ராஜாமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சசிகலா, அதிராம்பட்டிணம் நகரத் தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட பொதுச்செயலாளர் ஆண்டவர், கலை இலக்கிய பிரிவு மாவட்டத்தலைவர் கலைச்செல்வன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர்கனி, பட்டுக்கோட்டை வைரக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கும் அமலாக்கத்துறைக்கும் எதிராக கோஷமிட்டனர்.

The post சோனியா, ராகுல் மீது பொய் வழக்குகள்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: