சன்ரைசர்சுக்கு எதிராக மும்பை வெற்றி

மும்பை: ஐபிஎல் டி20 18வது சீசனின் 34வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணிகள் முதலில் பந்து வீச்சை தேர்தெடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 40 ரன் (28 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்த வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 19 ரன்னில் வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய கிளாசன் 37 ரன்னில் (28 பந்து, 2 சிக்சர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. அனிகெட் வர்மா 18 ரன் (8 பந்து, 2 சிக்சர்), பேட் கம்மின்ஸ் 8 ரன் (4 பந்து, ஒரு பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட், போல்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 36 ரன் (26 பந்து), ரிக்கெல்டன் 31 ரன் (23 பந்து), ரோகித் சர்மா 26 ரன் (16 பந்து), சூர்ய குமார் யாதவ் 26 ரன் (15 பந்து), பாண்ட்யா 21 ரன் (9 பந்து) எடுத்தார். திலக் வர்மா 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

The post சன்ரைசர்சுக்கு எதிராக மும்பை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: